இரண்டு நதிகள் கூடுமிடம் பிரயாகை எனப்படும். இங்கு அளகநந்தா மற்றும் பாகீரதி நதிகள் சங்கமம் ஆகின்றன. பிரம்மதேவன் தேவர்களுக்கெல்லாம் தேவரான திருமாலைக் குறித்து இங்கு வேள்வி செய்ததால் தேவப்பிரயாகை என்று அழைக்கப்பட்டது. கடல் மட்டத்திலிருந்து 1700 அடி.
மூலவர் நீலமேகப் பெருமாள், புருஷோத்தமன் என்னும் திருநாமங்களுடன் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். இந்த ஸ்தலத்து மூலவரை ஆதிசங்கரர் ஸ்தாபித்தார். தாயாருக்கு புண்டரீகவல்லி என்பது திருநாமம். பரத்வாஜ முனிவருக்கு பகவான் பிரத்யக்ஷம்.
பாரதப்போரில் பாண்டவர்கள் தங்களது சகோதரர்களைக் (கௌரவர்கள்) கொன்ற பாவத்தைப் போக்க, மார்க்கண்டேய முனிவர் அறிவுரைப்படி இங்கு வந்து பிரயாகையில் நீராடி பாப விமோசனம் பெற்றனர். இந்த ஸ்தலத்தில் வேள்வி செய்து, பரத்வாஜ முனிவர் சப்தரிஷிகளில் ஒருவரானார்.
பெரியாழ்வார் 10 பாசுரங்கள் பாடியுள்ளார்.
இக்கோயில் காலை 5.30 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|